Saturday, December 17, 2011

`ஜூனி&சீனி`

ஜூனி&சீனி`...ஒரு அறிமுகம்:- ஜூனியரும்,சீனியரும் நம் `நாக்கு அவுட்!`பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர்கள்!.சுருக்கமாக ஜூனி...சீனி!.காற்றுப் புக முடியாத இடத்திலும் நுழைந்து விடும்,அசகாய சூரர்கள்! எளிதில் பேட்டி தராத அரசியல் தலைவர்களைக் கூட,சமார்த்தியமாக..வாயைக் கிண்டி பேசவைத்து விடுவார்கள்!.இதோ,நம் `நாக்கு அவுட்`பத்திரிக்கையின் வாசகர்களுக்காக(?! )எதற்குமே அசைந்து கொடுக்காத,நம் பிரதமரின் பிரத்தியேக பேட்டி!.இது முழுக்க,முழுக்க ஒரு கற்பனை பேட்டிதான் என்றாலும்,வருங்காலத்தில் இது நிஜமானால்,அதற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!.மேலும் இது முழுக்க முழுக்க,ஒரு சீரியஸ் பேட்டி என்பதால்,உங்கள் முகத்தையும்...கொஞ்சம் `சீரியசாகவே`வைத்துக் கொள்ளவும்!...ரெடி!...ஸ்டார்ட் மியூசிக்...!!! 


சீனியாரிட்டி அடிப்படையில் சீனியரே பேட்டியை ஆரம்பிக்கிறார்.... 
சீனி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தது ஏன்?பிரதமர்: அது....இந்தியாவை விரைவில் வல்லரசாக்கும்,எங்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம்!.ஆனால் துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதியால்,நாங்கள் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்க வேண்டியதாக ஆகி விட்டது!.
சீனி:.அதெப்படி சில்லறை வர்த்தகத்தின் மூலம்,வல்லரசு ஆக முடியும்?அதுவும் விரைவில்?.
பிரதமர்: வெரி சிம்பிள்...இந்தத் திட்டப்படி,ஏற்கனவே வல்லரசாக இருக்கும்...நாடுகளுக்கு மட்டுமே நாங்கள் அனுமதி தருவோம்!,கொஞ்ச நாள் வியாபாரத்தில் அவர்கள்,எப்படியும் நம்மை அடிமைப் படுத்தி விடுவார்கள்...நாம் ஒரு வல்லரசு நாட்டின்`கண்ட்ரோலில்` இருக்கும் பொழுது,நாமும் ஒரு வல்லரசுதானே?முடிவுகளை யார் எடுத்தால் என்ன?...இப்பொழுது நான் எடுக்கும் எல்லா முடிவுகளும்,என்னுடையதா என்ன?(பிரதமரின் இந்த அதிரடி எதிர்க் கேள்வியால் சீனியின் பல்ஸ் எகிறுகிறது...அவரை ஆசுவாசப் படுத்தி விட்டு ஜூனி,கேள்விகளைத் தொடர்கிறார்...)
 ஜூனி: அண்ணா ஹசாரே?...
பிரதமர்: ஹேஹே...அவரைத்தான் இப்பொழுது எங்களைப்போல,`காமெடி பீசு` ஆக்கிவிட்டோமே!.
ஜூனி : சரி...சார்...தமிழகப் பிரச்சினைகள் பற்றி...முல்லைப் பெரியாறு பிரச்சினையை,நீங்கள் மனது வைத்தால் தீர்த்து விடலாமே?கேரளாவில்...உங்கள் கட்சியின் ஆட்சிதானே நடக்கிறது?.
பிரதமர்: எது?...கேரளாவில் எங்கள் கட்சியின் ஆட்சியா நடக்கிறது?வழக்கமாக அங்கே,கம்யுனிஸ்டுகள் ஆட்சி தானே நடக்கும்?அப்போ...உம்மன் சாண்டி காங்கிரஸ் ஆளா?(பிரதமர் உதவியாளரைப் பார்க்கிறார்...அவர் கூகுளில் தேடி,அரை மனதோடு `ஆமாம்`என்பது போல தலை ஆட்டுகிறார்!)...நீங்களே பாருங்கள்...இந்தத் தகவல் எல்லாம்,நானாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!என் கவனத்திற்கு நீங்கள் கொண்டுவந்ததற்கு நன்றி!...
விரைவில்...அணையை உடைத்து விடலாம்!...குறுக்கே அணை இருப்பதால்தானே,தமிழகதிற்கு வர வேண்டிய தண்ணீரை அவர்கள் தடுக்கிறார்கள்!?...
(இப்பொழுது ஜூனி டென்சன் ஆகிறார்...சீனி ஆல்ரெடி அரை மயக்கத்தில் இருப்பதால்,ஜூனியே சுதாரித்து தொடர்கிறார்!).
ஜூனி: தமிழக முதல்வர் தங்களுக்கு,தமிழகப் பிரச்சினைகள் குறித்தும்,மத்திய அரசு உதவி கேட்டும் பல கடிதங்கள் தங்களுக்கு எழுதியும்,தாங்கள் ஏன் இதுவரை ஒரு பதில் கூட எழுதவில்லை?...
பிரதமர்: அந்தக் கடிதங்கள் எல்லாம்,முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதப் பட்ட,தமிழ் கடிதங்களாக இருப்பதால்,எங்கள் அலுவலகத்தில்...அதை,இந்தியில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்...கூடிய விரைவில்,ஏதாவது ஒரு இந்திய மொழியில்,பதில் எழுதி விடுவோம்!.
ஜூனி: அலைக்கற்றை ஊழலில்,இப்பொழுது உள்துறை அமைச்சர்,சிதம்பரம் பெயரும் அடிபடுகிறதே?!
.பிரதமர்: சிதம்பரத்தின் நேர்மையை நான் முழுக்க,முழுக்க நம்புகிறேன்!மேலும்...பிரணாப் முகர்ஜி,கபில் சிபல் எல்லோரும் அவ்வாறே நம்புகிறார்கள்...நான்தான் சிதம்பரம் நல்லவர் என்று சர்டிபிகேட் தருகிறேனே!.
ஜூனி: இப்படித்தான்...உங்கள் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும், `சர்டிபிகேட்` தந்தீர்கள்?!!!.
பிரதமர்: ராசா விஷயம் வேறு...ஆனால் சிதம்பரத்திற்கு ஞாபக மறதி என்பது...நாட்டிற்கே தெரியுமே!.,அவர் எதோ ஒரு ஞாபக மறதியில் எடுத்த,ஒரு முடிவை...நாம் பெரிது படுத்தக் கூடாது!
ஜூனி: தமிழக காங்கிரஸ் பற்றி?...
பிரதமர்: தம்பி...தமிழக காங்கிரஸ் பற்றி...சீரியசாக சொல்வதற்கு ஒன்றுமில்லை!காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் இருக்கின்றன,அதில் முழுக்க முழுக்க மக்களை மகிழ்விக்க நாங்கள் அமைத்த ஒரு கலைக் குழுதான் தமிழகக் காங்கிரஸ்...பல்வேறு பிரச்சினைகளில் இருக்கும் மக்கள்...சிரித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே அமைக்கப் பட்டது அது!.எந்நேரமும் இருக்கும் சீரியசான அரசியலில்,எங்களுக்கும் ரிலாக்ஸ் தருவது இவர்கள்தான்!.இந்த விஷயத்தில் தமிழக மக்கள்...நீங்கள்தான் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!.இப்பொழுது நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஞான தேசிகன் அவர்களும்,தங்க பாலுவிற்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல...அவரும் அவர் பங்களிப்பாக,காமெடி அறிவிப்புகள் மூலம் உங்களை எல்லாம் மகிவிப்பார் என,நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்!
சீனி: அதெல்லாம் சரி சார்...கோஷ்டி சண்டை இல்லாத சத்திய மூர்த்தி பவனை தமிழக மக்கள் எப்பொழுது பார்ப்பது?
(இந்தக் கேள்விக்கு,பிரதமர் ஜூனி&சீனி இருவரையும் குறுகுறுவெனப் பார்க்கிறார்...பின் அவர் உதவியாளரைப் பார்க்கிறார்...அவரோ முகத்தைத் திருப்பிக் கொள்ள,மறுபடியும் வேறு வழி இல்லாமல் ஜூனி&சீனி பக்கம் பார்வையைத் திருப்பி,அவர்களையே வெறித்துப் பார்க்கிறார்...ஏறக் குறைய நாயகன் படத்தில்,நிழல்கள் ரவி இறந்ததும் கமல் கதறி அழுவாரே,அது போல ஒரு முக பாவனைக்கு வருகிறார்!...என்றாலும் கொஞ்ச நேரத்தில் சுதாரித்து,நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தி,கண்களை மூடிக் கொள்கிறார்...ஏறக்குறைய ஒரு ஆழ்நிலை...தியான நிலைக்கு சென்றுவிட்ட அவரை,அதற்கு மேலும் கேள்விகள் கேட்டு தொல்லைப் படுத்தாமல்,ஓசையின்றி வெளியேறுகிறது ஜூனி&சீனி டீம்!)......


நண்பர்களே!... அரசியலில் சம காலத்தில்,எல்லா முக்கிய விஷயங்களிலும்,நம் பிரதமர் வாயே திறக்காமல்,எந்த ஒரு திடமான முடிவும் எடுக்காமல் இருக்கிறார் என்ற உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு...அதன் விளைவே இந்தக் கற்பனை கேள்வி பதில்கள்..!

26 comments:

  1. , செம செம , மக்களை மகிழ்விக்க நாங்கள் அமைத்த ஒரு கலைக் குழுதான் தமிழகக் காங்கிரஸ்...
    நச் மச்சி, நீங்களும் எழுத்தாளன் தானா? மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு

    ReplyDelete
  2. நல்ல வளமையான எழுத்துநடை! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  3. நல்ல நக்கல். ரசித்தேன்.நீங்கள் தாரளாமா இதுபோல தொடரலாம். நாங்க இருக்கோம் ரசிக்க வாழ்க வளர்க

    ReplyDelete
  4. சில நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்கும்..சில மௌனமாய் மனசுக்குள் ரசித்து சிரிக்க வைக்கும்.நீ இரண்டாம் வகை மச்சி :-) தொடரலாமான்னு சந்தேகமே வேண்டாம் 'நீ கலக்கு சித்தப்பு' ;-))

    ReplyDelete
  5. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கவும், வரவேற்கவும் நாங்கள் தயார்

    ReplyDelete
  6. nala iruku ..

    Ungaluku comedy eludha varudhu.. kadaisi kelviku PM reactiona neenga vivaricha edam. oru udaranam.. I liked it

    Ore oru suggestion..

    PAragha eludhunga.. mudinja color maathi maathi podunga.. (Kelviku oru color padhilku oru colornu) ..

    Indha inaya ugathil.. ungal blog noki varuvori vitu vidaamal irupadharkaga sonen saga :)

    Thodaravum :)

    ReplyDelete
  7. திருமாறன்.திDecember 18, 2011 at 2:08 AM

    நல்லாயிருந்தது.வாழ்த்துகள்.தொடருங்கள்

    ReplyDelete
  8. ayyayyoo அய்யய்யோ, இந்தாளு ட்விட்டர்லயே ஓவரா லொள்ளு பண்ணூவார், இப்போ பிளாக்கும் ஓப்பண்டு? என்ன நடக்கப்போகுதோ?

    ReplyDelete
  9. >>.உங்களின் பின்னூட்டங்களைப் பொறுத்தே இதைத் தொடர்வதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும்.

    நல்லாருக்கு, செமயா இருக்குனு உண்மையை சொன்னா இந்தாளு டெயிலி போஸ்ட் போடுவாரு , நைஸா சுமார்னு சொல்லி தப்பிச்சுட வேண்டியதுதான் ஹி ஹி

    ReplyDelete
  10. வாழ்த்துகள்:) தொடருங்கள்:):)

    ReplyDelete
  11. பதிவு அருமை :)

    ReplyDelete
  12. தொடக்கம் முதலே தங்களின் ஆர்ப்பாட்டமில்லாத நயமான நக்கல் பாணியை ரசித்து வருகிறேன் .இந்த பதிவும் ஏமாற்றவில்லை.தொடருங்கள் -vembaikrishna

    ReplyDelete
  13. எழுதுவீங்கன்னு தெரியும்!இவ்ளோ நல்லா எழுத வருமா?அசத்துது!எங்க குரூப் பேவரைட் ஆகிடுச்சு உங்க பிளாக். :-)

    ReplyDelete
  14. Gud attempt...Keep writing... Nice...!
    Try to avoid spelling mistakes....

    Tparavai...

    ReplyDelete
  15. நல்லாயிருக்கு..தொடருங்கள் வாழ்த்துகள்...மூர்த்தி ( @Moorthy2.twitter )

    ReplyDelete
  16. அருமையா பண்ணிருக்கீங்க.. ! தொடருங்கள்.. ! காட்டன் சாரி வ.லட்சுமிக்கு டேடிகேட பண்ணுங்க..! #சும்மா கலாய்ச்சிங்..;-))

    ReplyDelete
  17. நல்லாருக்கு..! தொடருங்கள்!

    ReplyDelete
  18. அருமையான பதிவு நண்பா. துக்ளக்கில் வேலை செய்கிறாயா என்று கேட்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  19. ரொம்ப ரொம்ப ரசித்துச் சிரித்தேங்க. பல இடங்களில்

    /விரைவில்...அணையை உடைத்து விடலாம்!...குறுக்கே அணை இருப்பதால்தானே,தமிழகதிற்கு வர வேண்டிய தண்ணீரை அவர்கள் தடுக்கிறார்கள்!?...//

    இது ரொம்ப நல்லா இருக்கு. கடைசில தமிழ் நாடு காங்கிரஸ் பத்தி சொன்னதுலாம் ரொம்பவே சிரிக்க முடிஞ்சது.

    பயப்படாம தொடர்ந்து எழுதுங்க. நல்லா இருக்கு :))

    ReplyDelete
  20. ஜூனி & சீனி கிட்ட சொல்லி, சின்னம்மா இல்லாத அம்மா கிட்டயும் ஒரு பேட்டி எடுங்க, புண்ணியமா போகும் :)

    ReplyDelete
  21. பிரிச்சி மேஞ்சிருக்கீங்க :-) soopar

    ReplyDelete
  22. நெசமாத்தான் சொல்றீங்களா?
    (இது போல உண்மையா நடந்தாலும் வியப்பொன்றும் இல்லை)

    ReplyDelete
  23. நாட்டு நிலைமையை அப்படியே புட்டு புட்டு வைச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்,சின்ன தகவல் அந்த கேள்வி பதில் வசனங்களை இடைவெளி விட்டு சுட்டிக்காட்டுங்கள் ..இன்னும் சிறப்பாக இருக்கும்..

    ReplyDelete