Saturday, August 13, 2011

`முன்னூட்டம்`

அடடே!... நானும் BLOG-எழுத ஆரம்பித்து,அதற்க்கு `தலைப்பும்` வைத்து விட்டேனே!.இது அய்யனார்ஸ் ..`கலைடாஸ்கோப்`!. நான் பார்த்த,என்னை பாதித்த மனிதர்களையும்,சம்பவங்களையும்,நான்பார்த்தவாறே உங்களுக்கும் காட்ட நினைக்கும் ஒரு விபரீத முயற்சியும் கூட! இதில்,இதைப் படிக்கும் நீங்கள் கூட இருக்கலாம்!.இனி நீங்களும் ரசிக்க,என் கலைடாஸ்கோப்பை,உங்கள் கண்களுக்குத் தருகிறேன். சமயத்தில் ...நான் காணாத காட்சிகள் கூட, உங்கள் கண்களுக்கும்,கருத்துக்கும் தெரியலாம்!.காட்சிகளை மாற்றி,மாற்றிப் பார்த்து ரசியுங்கள்.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாருங்கள்...ஆனால் தயவு செய்து,..இவ்வளவு அழகான பிம்பங்களைத் தருகிறதே!..உள்ளே என்னதான் வைத்திருப்பான் இவன்? ...என ஆராயும் நோக்கில்,இதை உடைத்துப் பார்த்து விடாதீர்கள்..காரணம் உள்ளே இருப்பது கூட ஏற்கனவே `உடைந்த விஷயங்கள்தான்!`......(காட்சிகள் தொடரும்!....)

13 comments:

  1. வெற்றிப் பெற என் முதல் வாழ்த்துகள் நண்பா. தொடர்ந்து கலக்கு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். ட்விட்டரோடு, இனி உங்கள் பிளாகிற்கும் அடிமையாகிவிடுவேன் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. இன்னும் இரண்டு நாள் கழித்து சுதந்திர தினத்தன்று ஆரம்பித்திருக்கலாம். வேர்ட் வெரிஃபிகேஷனை நீக்கி விடவும்.

    ReplyDelete
  4. உங்கள் முதல் ஃபாலோயர் நான் தான். ஹிஹிஹி :-))

    ReplyDelete
  5. hey..i can`t really belive this.i thought that u told as joke.Anyhow congrats my loely friend!

    ReplyDelete
  6. (காட்சிகள் தொடரும்!....) சீக்கிரம் தொடரட்டும் ;-))

    ReplyDelete
  7. ”கவித..கிவித..ன்னு எங்களை மாதிரி எங்கே கிளம்பிடுவீங்களோ’ன்னு பயந்து கெடந்தோம்! நல்லவேளை! அரசியல்லே பூந்திட்டீங்க!!காமெடி என்பது, முள் மேல் நடப்பது மாதிரி! நீங்க..நல்லாவே ஓடறீங்க! வாழ்த்துகள்! மேலும் வளரட்டும்!”
    -அன்புடன் கருநாக்கு

    ReplyDelete
  8. நகைச்சுவை அருமை.வாழ்த்துகள்.தொடருங்கள்:)) @shanthhi

    ReplyDelete
  9. முதலில் வாழ்த்துக்கள் நண்பா..அப்பிடியே நாட்டு நடப்பையும் ஒவ்வொரு இந்தியக்குடிமகனின் மனசுக்குள் ஓட்டித்திரிந்து விளையாடும் கேள்விகளை வாயில்லா ஜீவன்கிட்டா கேட்டிருக்கிறீர்கள்..தொடருங்கள்... அத்துடன் கேள்வி பதிலுக்கிடையில இடைவெளி, பந்தி பிரிப்பு போன்றம் சில சரிபார்ப்புக்களை செய்யுங்கள்

    ReplyDelete
  10. ஒரு புதிய முயற்சி, ஆனால் I think FDI should be there upto certain level, to develop our country. It also helps to maintain the stable economical and financial state of our country.

    ReplyDelete
  11. வாழ்ழ்த்துக்கள் தோழா. ஆரம்பே ஓரளவுக்கு அமர்க்களமாய் இருக்கு இன்னும் எதிர் பாக்குறேன். //முன்னூட்டம்// குசும்பு ஜாஸ்தி

    ReplyDelete
  12. ஆரம்பமே நல்ல பதிவு. சொன்னது போல கவிதைய இருக்குமோன்னு பயந்துகிட்டே தான் வந்தேன். ஏமாத்திடீங்க.
    //முன்னூட்டம்// குசும்பு

    ReplyDelete
  13. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete