கட்டதொர : அவனருளாலே அவன் தாள் வணங்கி..ன்னு பாடுறாங்க. அவனருள் கிடைக்கிற வரை வெய்ட் பண்ணனுமா? அப்புறம் ஏன் தியானம் பண்ணனும்றேன்?
இந்த கேள்வியில் இரண்டு விஷயங்கள் வருகின்றன..1)அவனருளாலே அவன் தாள் வணங்கி..என்பதன் பொருள்!
2)அவனருள் இருந்துவிட்டால்,`ஞானம்`அதுவா வந்துட்டுப் போகுது...நாம ஏன் தியானம் அது,இதுன்னு போகணும்ன்னு ஒரு துணைக் கேள்வி!..ரைட்..
1)அவனருளாலே அவன் தாள் வணங்கி..ன்னு சொல்றது ஞானத்தை நோக்கி செல்வதன் ,பல நிலைகளில் ஒரு நிலைன்னு முதல்ல புரிஞ்சுக்கணும்!
இந்த அவனருளாலே அவன் தாள் வணங்குதல் என்ற நிலை ,முழுக்க முழுக்க `சரணாகதி`நிலையில்தான் வரும்!
அந்த நிலைக்கு வருவதற்கு,முதலில் எல்லாமே அவனருளால் தான் நடக்கிறது..நாம் வெறும் கருவிகள்தான் என்ற பக்குவ நிலைக்கு நீங்கள் வர வேண்டும்!
இந்த பக்குவ நிலை எப்படி வரும்?..நம்மை நாமே கவனித்தால் மட்டுமே இந்த பக்குவ நிலைக்கு நாம் வரமுடியும்...அதற்குதான் தியானம் உதவுகிறது!..தியானம் என்பது ஒரு பயிற்சிமுறை..அது,நாம் விரைவில் இந்த பக்குவநிலைக்கு வருவதற்கு உதவுகிறது..அவ்வளவுதான்!
ரைட் ..இப்போ பிராக்டிகல் லைப்ல ஒரு உதாரணம் சொல்றேன்...புரியுதான்னு பாருங்க..நீங்க ,துபாய்ல இருந்து..இங்க வந்து திருப்பதி பாலாஜியை தரிசனம் பண்றதா ஒரு திட்டம்ன்னு வச்சுக்கோங்க...நீங்க நினைத்தால் மட்டும் இது சாத்தியமான்னு யோசிச்சுப் பாருங்க!..நீங்க அங்க இருந்து,கிளம்பி இங்க வந்து தரிசனம் பண்ணிட்டு,வீட்டுக்கு போறதுக்குள்ள எத்தனை பேர் கையில் உங்கள் `உயிர்`(டாக்சி டிரைவர்,விமானி..இப்படி) இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!..இதெல்லாம் தாண்டி ,நீங்க தரிசனம் செய்ய நினைத்த அன்று..எதோ ஒரு காரணத்திற்காக தரிசனத்தை ரத்து செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்!...உங்கள் திட்டம் என்னாவது?..இது போல யோசிக்க யோசிக்க... நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்ற தெளிவு வரும்!..
அப்புறம் உங்க கேள்வியில் இருப்பது போலவே , எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் `ஞானம்`வந்துரும் போலன்னு பல பேர் நினைக்கிறார்கள் ..!..இது தவறு...இந்த இடத்துல `ஓஷோவை`துணைக்கு அழைக்கலாம் என நினைக்கிறேன்!
`ஓஷோவின்`வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு..`ஞானம்`அடைதல்...இது பற்றி அவர் சொல்லும் போது,இப்படி சொல்கிறார்..."எனது எல்லா முயற்சிகளையும் கைவிட்ட நிலையில்,
எந்த முயற்சியும் இன்றி `வெறுமனே`இருந்த போது...அது நிகழ்ந்தது..."
இந்த நிலைக்கும்,நீங்க சொன்ன`அவனருளாலே அவன் தாள் வணங்கி`என்ற நிலைக்கும் ஒரு தொடர்பு இருப்பதை கவனியுங்கள்!
அதாவது எதுவமே செய்யாமல் அவர் இருந்த போதுதானே அது நிகழ்ந்தது?!
இப்ப நல்லா கவனிச்சுப் பாருங்க..எல்லா முயற்சிகளையும் கை விட்ட போதுன்னு`ன்னு அவர் சொல்வதை பலரும் .."ஓ! எதுவுமே செய்யாமல் இருந்தால்,ஞானம் அதுவா வந்துரும் போல`ன்னுதான் புரிந்து கொள்கிறார்கள்!
ஆனால் விஷயம் அதுவல்ல...எப்போது ஒருவர் எல்லா முயற்சிகளையும் கை விட முடியும்?...எல்லா முயற்சிகளையும் அவர் செய்திருந்தால் மட்டும்தானே அது சாத்தியம்? அதாவது,எந்த முயற்சியுமே செய்யாத ஒருவர் ..நான் எல்லா முயற்சியையும் கை விட்டுட்டேன்னு சொல்றது அபத்தமான உளறல்தானே?!
..இதேதான் `அவனருளால் அவன் தாள் `வணங்குதல் என்ற நிலைக்கும்!...
பதிலை ஓரளவு சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்..நீங்க கேட்ட கேள்விகளுக்கான...பதில்களை நீங்க கேட்ட வரிசைப் படி தரவில்லை,..எனக்கு பதில் சொல்லனும்னு தோனுகிற கேள்விக்கு ,எனக்கு தோனுகிற படிதான் பதில் சொல்வேன்...அதை வரிசைபடுத்திக் கொள்வது உங்க பொறுப்பு...சரியா?...இன்னும் உங்க மூணு கேள்வி பாக்கி இருக்கு! ரைட்டா? #பிரேக்!...,;)

No comments:
Post a Comment